Monday, February 15, 2010

தோழியா என் காதலியா - காதலில் விழுந்தேன்

ஆண்: தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே
ஏனடி என்னைக் கொள்கிறாய்
உயிர்வரை சென்று தின்கிறாய்
மெழுகுபோல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்
கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிடிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதிலென்ன அதை நீயே சொல் (தோழியா என்...)

(இசை...)

ஆண்: ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்கவிட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர்த்துளியை
மகிழ்ச்சி தந்து உலரவைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண்ணருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரம் இரவு கண்டேன்
ஆலிவ் நிறத்தின் தேவதையே
வண்ணங்களை தந்துவிட்டு
என் அருகில் வந்து நில்லு (தோழியா என்...)

குழு: சனனம் சனனம் சனனம் சானனனம் சானனனா
சனனம் சனனம் சனனம் சானனனம் சானனனா
சனனம் சனனம் சனனம் சானனனம்
னனம் சனனம் சனனம் சானனனம் சானனனா
சனனம் சனனம் சனனம் சானனனம்
சனனம் சனனம் சனனம் சானனனம்

(இசை...)

ஆண்: இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினிப் பூச்சிகள் மிதக்கவிட்டாய்
தனி அறையில் அடைந்துவிட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்கவிட்டாய்
அலைகள் அடித்து தொலைந்துவிடும்
தீவைப்போல மாட்டிக் கொண்டேன்
இறுதிச்சடங்கில் மிதிகள் படும்
பூவைப்போல் கசங்கி நின்றேன்
தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கில்லை
எனக்கொரு தாய் அவள் என்னருகில் வந்துவிட்டாள் (தோழியா என்...)

No comments:

Post a Comment