Tuesday, February 16, 2010

மாமன் எங்கிருக்கான் - பூ

பெண்: மனசுக்குள்ள காதல் சிரிக்குது
மழையும் இல்ல வெயிலும் இல்ல
அப்புறம் எப்படி வானவில் வந்தது
மாமன்காரன் எங்கே இருக்கான்

(இசை...)

பெண்: மாமன் எங்கிருக்கான் ஆத்தாடி
மயிலு காத்திருக்கா வாக்கூட்டி

ஆண்: கண்ணுக்குள் வச்சிக்கிட்டு வெளியே நீயும் தேடாதே
வண்ணத்துப் பூச்சி என்றும் பூவ விட்டுப் போகாதே

பெண்: குட்டிப்போட்ட பூனை போல
உன் கால நான் சுத்துவேன்

ஆண்: குறுக்கு போட்ட பின்னல் போல
உம்மார்பில் இளப்பாறுவேன்

பெண்: அல்லிக்குளம் மேல
கல்லைப் போட்டு போற
வட்டம் போட்டு அலை பாயுதே

ஆண்: ஆலைச்சங்கு சத்தம் கேட்கும் போது கூட
உன்னோட பேர் சொல்லுதே

(இசை...)

பெண்: கையத் தொட்டு பேசுற மாமன்
மையவச்ச முகத்தையும் தொடுவான்
நெருங்கி வருவான் முத்தம் தருவான்
மத்த கதை நான் சொல்ல மாட்டேன்
பாசிமணி கிடக்கிற கழுத்தில்
பத்து விரல் தடயங்கள் தருவான்
ஊசி வெடியாய் உள்ள வெடிச்சி
மூச்சு விட்டு மயங்கியேப் போவேன்

ஆண்: ஆளாகி நாளான ராசாத்தியே
அழகால என் நெஞ்ச கொடை சாச்சியே

பெண்: வெள்ளை வேட்டி மேல பச்சைக்கர போல
ஒட்டிக்கொள்ள எடங்கேக்கிற

ஆண்: ஏ வண்டி கட்டித்தானே பொண்ணு கேட்டு வந்தேன்
வெட்கத்த நான் எடை பார்க்குறேன்

(இசை...)

பெண்: தாலி கட்டி ஒனக்கும் எனக்கும்
தேன் நிலவு நெலவுல நடக்கும்
பாலும் பழமும் இருக்கும் போதும்
வேற பசி நெஞ்சுல எடுக்கும்
கட்டிலுக்கு தெனம்கால் வலிக்கும்
108 புள்ளகுட்டி பொறக்கும்
நம்ம புள்ளைங்க படிக்கத்தானே
பள்ளிக்கூடம் தனியா தெறக்கும்

ஆண்: எம்மாடி எம்மாடி தாங்காதம்மா
ஆனாலும் என்னாசை தூங்காதம்மா

பெண்: சைய சைய சையா
அத்தை பெத்த பையா
ஒத்திகைக்கு எப்ப வரட்டும்

ஆண்: ஒத்தப்பார்வை பார்த்தே செத்துப் பொழச்சேண்டி
மொத்தப் பார்வை என்ன வெரட்டும் (மாமன் எங்கிருக்கான்...)

No comments:

Post a Comment