Tuesday, February 16, 2010

நெஞ்சே நெஞ்சே - அயன்

பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே... என் வாழ்வும் அங்கே...
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் எங்கே... என் ஜீவன் எங்கே...

ஆண்: என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய் (நெஞ்சே நெஞ்சே...)

(இசை...)

ஆண்: கண்ணே என் கண்ணே நான் உன்னைக் காணாமல்
வானும் இம்மண்ணும் பொய்யாகக் கண்டேனே

பெண்: அன்பே பேரன்பே நான் உன்னைச்சேராமல்
ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே

ஆண்: வெயிற்காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசியாகும்

பெண்: உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும் (நெஞ்சே நெஞ்சே...)

(இசை...)

பெண்: கள்வா ஏ கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே

ஆண்: காதல் மெய் காதல் அது பட்டுப்போகாதே
காற்று நம் பூமி தனை விட்டுப்போகாதே

பெண்: ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறிப் போகக்கூடாதே

ஆண்: ஏ மச்சத் தாமரையே என் உச்சத் தாரகையே
கடல் மண்ணாய்ப் போனாலும் நம் காதல் மாறாதே

பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே... என் வாழ்வும் அங்கே...

ஆண்: அன்பே அன்பே நான் இங்கே
தேகம் எங்கே... என் ஜீவன் எங்கே...
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய்

பெண்: உன் தாகங்கள் தீராமல் மழையை ஏன் வைகிறாய்

No comments:

Post a Comment